சர்தார் 2 ரிலீஸ் எதிரொலி : முதல்வர் விஜய்யிடம் கார்த்தி வைத்த கோரிக்கை
செப் 03, 2026
Advertisement
திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளங்களில் கசிவது, சினிமாத் துறைக்கு தொடர்ந்து மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. சர்தார் 2 பட விளம்பரப் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் கார்த்தியிடம், இந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் விஜய்யிடம் முறையிட்டீர்களா? என்று தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த கார்த்தி, இந்த பிரச்னை குறித்து தான் முதல்வரிடம் பேசியதாக கூறினார். மேலும், முதல்வர் விஜயிடம் மற்றவர்களை விட இந்த பிரச்னை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தயவு செய்து இதை கொஞ்சம் கவனியுங்கள் என்று கூறியதாகவும், கண்டிப்பாக படங்கள் இணையத்தில் கசிவதை தடுக்க தான் முயற்சி எடுப்பதாக அவர் கூறியதாக தெரிவித்தார் கார்த்தி.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படம் செப்டம்பர் 10ம் திரைக்கு வரும் நிலையில், கார்த்தியின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!