பகவான் கிருஷ்ணராக விஜய் தேவரகொண்டா
செப் 03, 2026
Advertisement
குஜராத்தி மொழியில் கடந்த ஆண்டு வெளியான பக்தி படம் லாலோ - கிருஷ்ணா சதா சகாயதே. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. தொடக்கத்தில் மெதுவாக வசூலிக்க தொடங்கிய இப்படம், பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாத நிலையிலும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற குஜராத்தி திரைப்படமாக மாறியது.
இப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. சமீபத்தில், பகவான் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது தெலுங்கு ரீமேக்கில் விஜய் தேவரகொண்டா பகவான் கிருஷ்ணராக நடிக்கவுள்ளதாக்க கூறப்படுகிறது. லாலோ - கிருஷ்ணா சதா சகாயதே தெலுங்கு பதிப்பை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
மேலும், லாலோ - கிருஷ்ணா சதா சகாயதே படத்தின் கதையானது, ஒரு ஆட்டோ டிரைவர் தனிமையில் உள்ள ஒரு பங்களாவில் திருட முயற்சிக்கும்போது, எதிர்பாராதவிதமாக அங்கு சிக்கிக் கொள்வதை சுற்றி நகர்கிறது. வெளியேற வழியில்லாமல் தவிக்கும் அவருக்கு, ஒரு மர்மமான மனிதர் உதவி செய்ய வருகிறார். பின்னர் அவரே பகவான் கிருஷ்ணர் என்பது வெளிப்படுகிறது. அங்கித் சகியா இயக்கிய இப்படத்தில் கரன் ஜோஷி முதன்மை கதாபாத்திரத்திலும், ஸ்ருஹத் கோஸ்வாமி பகவான் கிருஷ்ணராகவும் நடித்திருந்தனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!