
ஆகஸ்ட் 9ல் வெளியாகும் குஷி படத்தின் டிரைலர்
ஆக 07, 2023
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் குஷி. அவர்களுடன் ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சிவா நிர்வானா இயக்கி உள்ளார். செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் விஜய் தேவர கொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதோடு குஷி படத்தின் இந்த டிரைலர் இரண்டு நிமிடங்கள் 41 வினாடிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு தான் கதையின் நாயகியாக நடித்து வெளியான யசோதா, சாகுந்தலம் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாத நிலையில் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து வருகிறார் சமந்தா.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!