மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்
ஏப் 24, 2024
Advertisement
"மதுபானக்கடை, வட்டம்" ஆகிய படங்களை இயக்கியவர் கமலகண்ணன். தற்போது காளி வெங்கட் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‛குரங்கு பெடல்" என்ற படத்தை இயக்கி உள்ளார். இது ராசி அழகப்பன் எழுதிய "சைக்கிள்" என்ற சிறுகதையை தழுவி உருவாகி உள்ளது. சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவனது தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக் கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும் படம் இது. இதனை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் வரும் மே 3ல் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!