பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா
மே 28, 2026
Advertisement
காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் கேபிஒய் பாலா. இன்று அவர் ஹீரோவாக நடிக்கும் ‛ரீமேட்ச்" பட பூஜை சென்னையில் நடந்தது. இதில் பாலா பேசியது, ‛‛முதல் படத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ராதா மோகன் உதவியாளர் விமல் குமார் இயக்குகிறார். தனு ஹீரோயினாக நடிக்கிறார். பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியில் நடக்கிறது. நானும் பேட்மிண்டன் பிளேயர் தான். இப்போது சில மாதங்களாக இந்த கதைக்காக மீண்டும் பயிற்சி எடுக்கிறேன்.
சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலருடன் இதில் நடிப்பது மகிழ்ச்சி. இளவரசு முக்கியமான வேடத்தில் வருகிறார். மறைந்த விவேக்குடன் பல படங்களில் காமெடி செய்த செல் முருகனும் இதில் இருக்கிறார். ஆதித்யா கதிருடன் பல ஆடிசன் போய் இருக்கிறேன். அவரும் இணைந்து இருக்கிறார். அச்சு ராஜாமணி இசையமைத்து இருக்கிறார். இந்த பட பூஜைக்கு வந்த இயக்குனர்கள் சசி, ராதா மோகன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. சாதாரணமாக இருந்த என்னை இந்த அளவுக்கு வளர்த்துவிட்ட தமிழக மக்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!