
பிஸியான கோமல் சர்மா
இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பிசியாகிவிட்டார் கோமல் சர்மா. மோகன்லால் முதன் முறையாக இயக்கி வரும் பரோஸ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இது சரித்திர படமாகும். இதை தொடர்ந்து மேலும் 3 படங்களில் நடிக்கிறார்.
தமிழில் சமுத்திரகனி நடித்துள்ள பப்ளிக் என்கிற படத்திலும், அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மோகன்லாலை வைத்து பெருச்சாளி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கிவரும் சாட் பூட் த்ரீ படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்த வருடம் கோமல் சர்மா நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!