அன்பில் அவன் : மீண்டும் வரவேற்பு பாதைக்குத் திரும்புவாரா அசோக் செல்வன்?
செப் 30, 2026
Advertisement
“சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, போர் தொழில், ப்ளு ஸ்டார்” ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அசோக் செல்வன். சினிமாவில் அறிமுகமாகி 13 வருடங்களைக் கடந்துவிட்டார்.
2023ல் வெளிவந்த "போர் தொழில்" படம் அவருக்கு தனித்துவமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன்பின் அவர் நடித்து வந்த படங்களில் "ப்ளு ஸ்டார்" படம் தவிர மற்ற படங்கள் சிறப்பாக அமையவில்லை. "சபாநாயகன், பொன் ஒன்று கண்டேன் (நேரடி டிவி வெளியீடு), எமக்கு தொழில் ரொமான்ஸ்," ஆகிய படங்களும், மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த "தக் லைப்" படமும் அசோக் செல்வனுக்கு வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை.
தனி கதாநாயகனாக சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள "அன்பில் அவன்" படம் நாளை மறுநாள் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தனது தனி கதாநாயகன் வரவேற்பை "அன்பில் அவன்" பெற்றுத் தந்தால் அவர் மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அவரது அக்கா உட்பட படக்குழுவினர் மகிழ்வார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!