
டாக்சிக் படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி
மே 16, 2024
Advertisement
"கேஜிஎப் 2" படத்திற்குப் பிறகு யஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் "டாக்சிக்". தமிழில் மாதவன் நாயகனாக நடித்து வெளிவந்த "நள தமயந்தி" படத்தில் நாயகியாக நடித்த கீது மோகன்தாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வரும் கியாரா மீண்டும் ஒரு தென்னிந்தியப் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
இப்படத்தில் யஷ் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேசி வருவதாகத் தகவல். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!