முட்டாள்களே, பொறாமை பிடித்தவர்களே - குஷ்பூ வெளியிட்ட காட்டமான பதிவு
செப் 06, 2022
Advertisement
50 வயதுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கும் குஷ்பு, பாஜகவின் நிர்வாகியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை குஷ்பு, என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன் என்ற ஒரு பதிவு போட்டிருந்தார். பலரும் வாழ்த்தினர், சிலர் கடுமையாக விமர்சித்தனர். இதனால் டென்ஷன் ஆகிவிட்டார் குஷ்பு. அதையடுத்து அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், ‛‛என்னை சுற்றி பல பொறாமை பிடித்தவர்களை நான் பார்க்கிறேன். லண்டனில் புதிய வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் அது சொந்த வீடு என்று ஆகிவிடுமா? முட்டாள்களே, நீங்கள் வாடகை வீடு என்று ஒன்று இருப்பதை பற்றி கேள்விப்பட்டதில்லையா? ஒரு பெண் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்தால் ஏன் பலருக்கு வலிக்கிறது என்பது புரியவில்லை"" என்று பதிவிட்டுள்ளார் குஷ்பூ.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!