உலக பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் கேஜிஎப் 2
ஏப் 18, 2022
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் "கேஜிஎப் 2". இப்படம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த படம் முதல் வார இறுதியில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது.
அது மட்டுமல்ல கடந்த வாரத்திற்கான உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் "கேஜிஎப் 2" படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வார நிலவரப்படி "பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்" படம் உலக அளவில் 114 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் "கேஜிஎப் 2" படம் 70 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஒரு கன்னடத் திரைப்படம் உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை. மூன்றாவது இடத்தை "சோனிக் 2" படம் 55 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் பிடித்துள்ளது.
உலக அளவில் 70 மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 550 கோடி ரூபாய். இந்த வாரத்திலும் "கேஜிஎப் 2" படத்தின் வசூல் சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!