கேஜிஎப் 2 - 5வது வாரம் : ரூ.1200 கோடி வசூல்
மே 13, 2022
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த "கேஜிஎப் 2" படம் கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. படத்திற்கான வரவேற்பும், வசூலும் கடந்த ஒரு மாத காலமாக சிறப்பாக இருந்து வருகிறது. இன்று இப்படம் ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
100 கோடி ரூபாய் செலவில் தயாராகி 350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு 1200 கோடி வசூலை இப்படம் குவித்துள்ளது. கன்னடத்தில் 175 கோடி, தெலுங்கில் 130 கோடி, தமிழ்நாட்டில் 110 கோடி, கேரளாவில் 65 கோடி, வட இந்தியாவில் 505 கோடி, வெளிநாடுகளில் 190 கோடி என இப்படம் ஒவ்வொரு ஏரியாவிலும் விற்கப்பட்ட விலையை விட நன்றாக வசூலித்து லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
ஒரு கன்னடத் திரைப்படம் மற்ற மொழிகளில் நேரடியாக வெளியான படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் "பீஸ்ட்", தெலுங்கில் "ஆச்சார்யா", ஹிந்தியில் "ஜெர்சி, ஹீரோபன்ட்டி, ரன்வே 34" உள்ளிட்ட படங்களின் போட்டிகளையும் வெற்றிகரமாக சமாளித்தது. இந்த வார இறுதி வரை ஓடி மேலும் சில கோடிகளை இப்படம் வசூலிப்பது உறுதி. அதற்குப் பிறகும் ஓடிடியில் வெளியாகும் வரை குறைவான தியேட்டர்களில் படம் ஓட வாய்ப்புள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!