
தோனி தயாரிப்பில் நயன்தாரா : மறுப்பு அறிவிப்பு
அதை தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்ட் நிறுவனம் எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. இப்படியான மோசடி தகவல்கள் மீது எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். எனினும், எங்களது நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களுக்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது, அவற்றை விரைவில் உங்களுடன் பகிர்வோம்,” என்று அறிவித்துள்ளது.
சஞ்சய் என்பவர் ரஜினிகாந்த்திடம் பணி புரிந்தவர் என்றும், அவர் தான் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் முக்கிய பணியில் இணைந்துள்ளார் என்றும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது. அதை தற்போது தோனி நிறுவனமே மறுத்துள்ளது.
அதேசமயம் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை. இதனால் அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!