நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்
ஜூன் 16, 2025
Advertisement
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஹிந்தியில் வெளியான ‛பேபி ஜான்" படத்திற்கு பின் அவரது நடிப்பில் ஆக., 27ல் வெளியாக உள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இதையடுத்து ‛அக்கா" என்ற வெப்சீரிஸிலும் நடிக்கிறார். இவைதவிர ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் ‛உப்பு கப்புரம்பு" என்ற படத்தில் நடித்துள்ளார். சத்தமின்றி நடந்து முடிந்துள்ள இந்த படத்தை சசி இயக்கி உள்ளார். நடிகர் சுகாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 90களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ள இப்படம் தியேட்டர் வெளியீட்டிற்கு தான் தயாரானது. இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சில காரணங்களால் இந்த படத்தை நேரடியாக ஜூலை 4ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…