ராக்கி கட்டி சிரஞ்சீவியை அண்ணனாக ஏற்றுக்கொண்ட கீர்த்தி சுரேஷ்
ஆக 23, 2021
Advertisement
சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனும் நடித்து இருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
"போலா ஷங்கர்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரக்ஷ பந்தன் தினமான நேற்று நடிகர் சிரஞ்சீவிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ராக்கி கட்டுவதை போன்ற புகைப்படம் அடங்கிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…