
ஹரிஷ் கல்யாண் பதிலாக கவின்
மே 04, 2023
Advertisement
நடிகர் கவின் டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் புதுப்படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படம் கொஞ்சம் தள்ளி போவதால் உடனடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி இயக்குனர் இளன் இயக்கத்தில் இப்போது கவின் நடிக்கவுள்ளார் . இந்த படத்தை இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாணை வைத்து துவக்கி ட்ராப் ஆன ஸ்டார் படம் தான் என கூறப்படுகிறது.. ரைஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!