பெண் வேடத்தில் கவின் குத்தாட்டம்
ஏப் 22, 2024
Advertisement
இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் "ஸ்டார்". டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர், கவின் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கவினுடன் அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
தற்போது படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "மெலோடி" என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில், கவின் பெண் வேடம் அணிந்து ஆட்டம் போட்டுள்ளார். கல்லூரி கலை விழாவில் அவர் ஆடுவதாக பாடலின் சூழல் அமைந்துள்ளது. தற்போது இந்த பாடல் காட்சி வைரலாக பரவி வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!