
கார்த்தியின் புதிய படத்தை இயக்கும் பேச்சிலர் பட டைரக்டர்
ஜன 25, 2022
Advertisement
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், முத்தையாவின் விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ள கார்த்தி, தற்போது சர்தார் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஜி.வி .பிரகாஷ் நடிப்பில் பேச்சிலர் என்ற படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப்போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் நடிகைகள், டெக்னிஷியன் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!