
சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா முன்னோட்டம்
ஜூன் 12, 2023
Advertisement
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யா பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வரும் இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 20ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. அப்போது சூர்யா - திஷா பதானி நடிக்கும் ஒரு பாடல் காட்சியை படமாக்குகிறார் சிவா. 8 நாட்கள் நடைபெறும் இந்த பாடல் படப்பிடிப்பை தொடர்ந்து, கொடைக்கானல் சென்று இப்படத்தின் சரித்திரகால பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்குகிறார்கள். இந்நிலையில் அடுத்தமாதம் சூர்யாவின் பிறந்தநாளின் போது இந்த கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக அப்பட வட்டாரங்களில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!