
இரண்டு நிமிட காட்சிக்காக 14 மணி நேரம் தண்ணீருக்குள் நின்ற ரகுல் பிரீத் சிங்
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஐ லவ் யூ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு இரண்டு நிமிட காட்சிக்காக 14 மணி நேரம் தான் தண்ணீருக்குள் நின்று நடித்ததாக கூறியுள்ளார். அதோடு இரண்டு நிமிடம் மூச்சை அடக்கியபடி தண்ணீருக்குள் மூழ்கி நடிக்க வேண்டிய இந்த காட்சிக்காக ஒரு மாதம் தான் பயிற்சி எடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் , கடுமையான குளிரில் தான் அந்த காட்சியில் நடித்ததால் ஒவ்வொரு ஷாட்டில் நடித்து முடித்ததும் படக்குழு என் மீது சூடான தண்ணீரை ஊற்றுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரண்டு நிமிட காட்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன் என்று கூறியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!