ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்
ஜூன் 12, 2023
Advertisement
“பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே” படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் அடுத்து இயக்கி வரும் படம் "மின்மினி". இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் மகள் கதிஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
அது பற்றி படத்தின் இயக்குனர் ஹலிதா, “மின்மினி" படத்திற்காக கதிஜா ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. மிகப் பெரும் திறமைசாலி அவர். அவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது,” என கதிஜா உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
"மின்மினி" படத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்கி வருகிறார் ஹலிதா. 2015ல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அப்போது குழந்தை நட்சத்திரங்களாக படத்தில் நடித்தவர்கள் வளரும் வரையில் ஏழு ஆண்டுகள் காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். பொதுவாக இரண்டு கால கட்டங்களில் கதை நடக்கிறது என்றால் வெவ்வேறு நட்சத்திரங்களை நடிக்க வைப்பார்கள். ஆனால், ஹலிதா அப்படி செய்யாமல் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களையே மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து நடிக்க வைத்து படமாக்கியுள்ளார். திரைப்பட உருவாக்கத்தில் இது ஒரு புது முயற்சி.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!