கங்குவா ரூ.2000 கோடி வசூல் : சூர்யா அளித்த பதில்
அக் 25, 2024
Advertisement
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் "கங்குவா". இப்படத்தின் தயாரிப்பாளர் கேஈ ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "கங்குவா" படம் 2000 கோடி வசூலிக்கும் என பேசியிருந்தார். இந்திய சினிமாவில் புதிதாக வெளியான படங்கள் அவ்வளவு வசூலைக் குவித்ததில்லை.
ஆமிர்கானின் "டங்கல்" படம் சீன வெளியீட்டிற்குப் பிறகுதான் 2000 கோடி வசூலைக் கடந்தது. அதற்கடுத்து தெலுங்குப் படமான "பாகுபலி 2" 1800 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தமிழில் அதிகபட்சமாக ரஜினிகாந்த் நடித்த "2.0" படம் 800 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
"கங்குவா" படம் 2000 கோடி வசூலிக்குமா என நேற்று ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா, “பெரிய கனவு கண்டால் அது குற்றமா?. அந்தக் கனவு வெளிப்படுவதை நம்புகிறேன், இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன், அது நடக்கட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என பதிலளித்தார்.
மற்ற தமிழ்ப் படங்களை விடவும் "கங்குவா" படத்தை பல ஊர்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தி படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!