வசீகரிக்கும் ‛அழகு - கங்கனாவின் சந்திரமுகி தோற்றம் வெளியீடு
ஆக 05, 2023
Advertisement
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், வடிவேலு, ராதிகா மற்றும் பலர் நடிக்கும் படம் "சந்திரமுகி 2". இப்படத்தில் "வேட்டையன்" கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இன்று(ஆக., 5) "சந்திரமுகி" கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனாவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான அழகுடன் இருக்கும் கங்கனாவின் தோற்றம் வசீகரமாகவே அமைந்துள்ளது. தமிழிலும் தடம் பதிக்க ஆசைப்படும் கங்கனாவிற்கு இந்த "சந்திரமுகி" கைகொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
இதற்கு முன்பு அவர் தமிழில் ஆர்வத்துடன் அறிமுகமான "தாம் தூம்", படமும், ஜெயலலிதாவின் பயோபிக் படமாக வெளிவந்த "தலைவி" படமும் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. "சந்திரமுகி" படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா ஆகியோர் நடித்தும் "சந்திரமுகி"யாக நடித்த ஜோதிகா தான் அப்படத்தில் அதிகம் பேசப்பட்டார். அது போல "சந்திரமுகி 2" படத்தில் கங்கனாவும் பேசப்படுவாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரிய வரும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…