
கல்கி படத்தின் புதிய அப்டேட்
பிப் 20, 2024
Advertisement
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "கல்கி 2898 ஏ.டி". பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூப்பர் ஹீரோ டைம் மெஷின் என வித்தியாசமான கதை களத்தில் இப்படம் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதில் பிரபாஸ், திஷா பதானி சம்மந்தப்பட்ட காதல் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது.
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…