சலார் வசூலைக் கடந்த கல்கி 2898 ஏடி
ஜூலை 04, 2024
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தில் அதிக வசூலைப் பிடித்த 3வது படமாக "கல்கி 2898 ஏடி" படம் முன்னேறியுள்ளது. பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த "சலார்" படத்தின் வசூலைக் கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "சலார்" படம் 600 கோடிக்கும் சற்றே கூடுதலாக தொகையை மட்டுமே வசூலித்தது. எதிர்பார்த்ததை விடவும் அந்தப் படத்திற்கு வசூல் குறைவுதான். "கேஜிஎப்" இயக்குனர் இயக்கிய படம் என்பதால் 1000 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை.
அதேசமயம் கடந்த வாரம் பிரபாஸ் நடித்து வெளிவந்த "கல்கி 2898 ஏடி" படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ரூ.700 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் தற்போது "பிரேக் ஈவன்" ஆகிவிட்டது. இனி வசூலாகும் தொகை லாபக் கணக்கில் சேரும். தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் அவருக்கு லாபம்தான். படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையே 100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
"பாகுபலி 2" படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள்(சலார் தவிர்த்து) அனைத்துமே வசூல் ரீதியாகத் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் அவரையும் சேர்த்து காப்பாற்றியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!