
கல்கி 2898 ஏடி - முதல் நாள் வசூல் 191 கோடி
ஜூன் 28, 2024
Advertisement
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த "கல்கி 2898 ஏடி" படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாள் வசூலாக சுமார் 180 கோடி வசூலித்திருக்கலாம் என முந்தைய செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், முதல் நாள் வசூலாக 191.5 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர் தோல்விகளில் தவித்து வந்த பிரபாஸுக்கு இந்த வசூல் நிச்சயம் மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.
நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வார இறுதிக்குள்ளாகவே இப்படம் 500 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் தேவையில்லாத கேமியோ கதாபாத்திரங்கள், நீளமான சண்டைக் காட்சிகள் படத்தின் தரத்தையும், வேகத்தையும் குறைத்துள்ளன. அவை படத்திற்கு மைனஸ் ஆக உள்ளன.
இருந்தாலும் 1000 கோடி வசூலை இப்படம் கடக்குமா என்பது திங்கள் கிழமைதான் தெரிய வரும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!