
தர்மன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் கயாடு லோகர்?
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா நடிக்கும் "தர்மன்" படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் இயக்குனரும் ஒரு முக்கியமான கேரக்டரில் கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம். சிவாஜி படத்துக்குபின் ஸ்ரேயாவும் ரஜினியுடன் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறாராம். இன்னும் சிலர் நடிப்பதும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறதாம்.
ரஜினி படத்தில் ஒரு பாடலுக்கு பிரபல நடிகை குத்தாட்டம் போடுவது வழக்கமாகி வருகிறது. தர்மன் படத்தில் யார் ஆடுகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. "ஜெயிலர்" படத்தில் தமன்னாவும், "ஜெயிலர் 2" படத்தில் பூர்ணாவும், நேரா பதேஹியும் ஆடி இருக்கிறார்கள். "கூலி"யில் பூஜா ஹெக்டே ஆடினார். தர்மன் பட இயக்குனருக்கு கயாடு லோஹர் நெருக்கமானவர் என்பதால் அவர் குத்தாட்டம் ஆட வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!