
இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிர் தப்பியது தான் கிருஷ்ணர் மீதான பக்தியை ஆழமாக்கியது : காஜல் அகர்வால்
இந்த நிலையில் அன்றைய படப்பிடிப்பில் தானும் இருந்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர நீண்ட நாளானது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார் படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால். அப்போது படமாக்கப்பட்டு வந்த ஒரு சண்டைக் காட்சிக்காக 80 வயது மூதாட்டி தோற்றத்தில் மேக்கப் போட்டு காஜல் அகர்வால் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தாராம். வழக்கமாக அமரும் மானிட்டர் அருகே அவர்கள் அமர்ந்திருந்த போது திடீரெனக் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுப் பலரும் ஓடத் துவங்கியுள்ளனர். அப்படி காஜல் அகர்வால் ஓடும் போது ஒரு மேசையில் மோதி கீழே விழுந்தாராம்.. அந்த நேரத்தில், "நான் ஏன் ஓடுகிறேன்? திரும்பிப் பார்த்து என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்" என்று திரும்பிப் பார்த்தபோதுதான் மேலே இருந்த அந்த கிரேன் தன் பக்கம் நோக்கி விழுவதைக் கண்டதாக அதில் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்ததாகவும், அதிர்ச்சியில் உறைந்து நின்ற போது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அல்லது ஒரு கை தன்னை அந்த இடத்தில் இருந்து இழுத்துப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார் காஜல் அகர்வால். விபத்திற்குப் பிறகு குழுவினர் ஓடி வந்து தன்னிடம் நலம் விசாரித்த போது, தன்னை யாராவது இழுத்தார்களா என காஜல் அகர்வால் கேட்டபோது அனைவரும் தொலைவில் இருந்ததாகவும், யாரும் அவரை இழுக்கவில்லை என்றும் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போன காஜல், தன்னைக் காப்பாற்றியது யார் என்பது இன்றுவரை ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் உயிருடன் இருப்பதே ஒரு அதிசயம் போலத் தோன்றியதாகவும், அந்த விபத்திற்குப் பிறகு கிருஷ்ண பகவான் மீது ஆழமான பக்தியும் ஆன்மீக நாட்டமும் உருவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…