காஜல் அகர்வால் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
காஜல் அகர்வால்
🎂19 Jun 1985· 41 years
12
🎬Films
50
📷Photos
41
🎂Age
பற்றி
தமிழ் திரையுலகிற்கு எக்கச்சக்கமான திரைபிரபலங்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் அறிமுகம் தான் காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த காஜல், 1985ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி பிறந்தார். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே மாடலிங்கில் நுழைந்தார் காஜல். க்யூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்த காஜல் லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே பழனி படம் வௌியாகிவிட்டது. தமிழில் பெரிய வாய்ப்பில்லாததால் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு நான் மகான் அல்ல படத்தில் ரீ-என்ட்ரியானார். பிறகு துப்பாக்கி, மாற்றான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.