காதலே காதலே படப்பிடிப்பு நிறைவு
மார் 08, 2024
Advertisement
ஸ்ரீவாரி பில்ம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் "காதலே காதலே". மஹத் ராகவேந்திரா - மீனாட்சி கோவிந்தராஜன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறியதாவது : "விண்ணைத்தாண்டி வருவாயா", "ஜோ" மற்றும் நம் இதயங்களை வென்ற மற்ற காதல் படங்களைப் போலவே மனதைக் கவரும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக "காதலே காதலே" இருக்கும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதியை அறிவிப்போம் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!