ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது
பிப் 20, 2025
Advertisement
தேவரா படத்திற்கு பின் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்து கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக "என்டிஆர் - நீல்" எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினா தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளனர். ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளவில்லை. மார்ச் மாதத்தில் இருந்து தான் ஜூனியர் என்டிஆர் சம்மந்தப்பட்ட காட்சிகளைக் படமாக்கவுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!