ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு
மே 20, 2024
Advertisement
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது "தேவாரா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர், கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.
இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இதனை தற்காலிகமாக "என்டிஆர் நீல்" என்கிற தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என அறிவித்தனர். தொடர்ந்து இன்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!