
4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ்
இருப்பினும், பிரபாஸ் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மீண்டு வந்த பிறகு, சண்டைக்காட்சிகளில் அவரே ரிஸ்க் எடுத்து நடிக்கத் தொடங்கினார். தற்போது ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்குப் பதிலாக எந்தவொரு டூப் நடிகரும் அவருக்கு பயன்படுத்தப்படவில்லை. பிரபாஸே அனைத்து சண்டைக் காட்சிகளிலும் நேரடியாக நடித்து வருவதாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படக்குழுவினர் மீதமுள்ள படப்பிடிப்பை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் முடித்து, 2027 மார்ச் மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்காக பிரபாஸ் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரணய் ரெட்டி வங்கா, தேவைப்படும்போதெல்லாம் பிரபாஸ் கூடுதல் மணி நேரம் உழைக்கத் தயாராக இருப்பதாகவும், இந்த சவாலான பணிச்சூழல் குறித்து அவர் ஒருபோதும் குறை கூறியதில்லை என்றும் கூறியுள்ளார். ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ், அதன் பிறகு படத்திலிருந்து தானாகவே விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!