
ஜிகர்தண்டா 2 : ‛மாமதுரை அன்னக்கொடி பாடல் வெளியானது
அக் 09, 2023
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா இணைந்து நடிக்கும் படம் ஜிகர்தண்டா-2. தீபாவளிக்கு திரைக்கு வரும் உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தில் மாமதுரை அன்னக்கொடி என்று தொடங்கும் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விவேக் எழுதி உள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் தனது மகள் தீயுடன் இணைந்து பாடியுள்ளார். பாபா பாஸ்கர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளளார். மாமதுரை அன்னக்கொடி, வா மதினி அண்ணன் ரெடி. மருத மெச்சும் அன்னக்கொடி, வா மதி நல்லா கொட்டும் அடி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள இந்த பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்த ஜிகர்தண்டா- 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!