விக்ரமின் ‛பவர் ஹவுஸ் : 100 சதவீதம் கியாரண்டியாம்
செப் 15, 2026
Advertisement
விக்ரமை வைத்து ‛இருமுகன்" படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர், மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். நாயகியாக ரியா ஷிபு நடிக்க, முக்கிய வேடத்தில் ஊர்வசி, விடிவி கணேஷ், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு இதுநாள் வரை தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்போது படத்தின் தலைப்பை ஒரு அறிமுக வீடியோ உடன் வெளியிட்டுள்ளனர். அதில் படத்திற்கு ‛பவர் ஹவுஸ்" என பெயரிட்டுள்ளனர். இது ரஜினியின் ‛கூலி" படத்தில் இடம்பெறும் முக்கியமான ‛சீக்ரெட் கோட்" ஆகும். அதை இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.
அறிமுக டீசர் 3:36 நிமிடம் ஓடுகிறது. இதில் குடும்பத்தினர் உடன் சேர்ந்து ஒரு கேட்டரிங் தொழில் செய்து வருவது போன்று விக்ரமிற்கு ஒரு முகம் இடம் பெற்றுள்ளது. இன்னொரு முகம் ஆக் ஷன் மோட். அதாவது, வீட்டில் ஸ்டோர் ரூமில் இருவரை கட்டி வைத்துள்ளார் விக்ரம். அவர்கள் உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது. அவர்களில் ஒருவனிடம், ‛‛மாமு... ஏன்டா அவசரப்படுற.... இப்பதான சமைக்க ஆரம்பிச்சு இருக்கேன், புல் மீல்ஸ் கொடுத்து தான் அனுப்புவேன், 100 சதவீதம் கியாரண்டி"" என தெரிவித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!