
பீஸ்ட் படத்தில் புட்டபொம்மா நடன இயக்குனர்
இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது. இந்த நிலையில், இரண்டாம்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. வட இந்திய பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்த காட்சிகளையும் செய்து சென்னையிலேயே முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். தெலுங்கில் ஆலவைகுந்தபுரம் படத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் பாடலான புட்டபொம்ம்மாவிற்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர், பீஸ்ட்டிற்கும் நடன இயக்கம் செய்து வருகிறார்.
முதல் நாள் ஷூட்டில் அவருக்கு விஜய்யும் யூனிட்டும் சேர்ந்து பொக்கே கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். விஜய் - பூஜா ஹெக்டேவின் டூயட் ஒரு வாரத்திற்கு மேலாக ஷூட் செய்யப்பட்டு வருகிறது. கோகுலம் ஸ்டூடியோவில் இந்த பாடல் காட்சி படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிய இருக்கிறது. பின்னர் மகாபலிபுரத்தில் வசன காட்சிகளையும் மால் செட் போட்டு சண்டைக் காட்சிகளையும் எடுக்க இருக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!