
7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ஜீவன் படம்
நவ 28, 2022
Advertisement
பொட்டு படத்திற்கு பிறகு விசி வடிவுடையான் இயக்கிய படம் பாம்பாட்டம். இதில் ஜீவன், மல்லிகா ஷெராவத், சுமன், யாஷிகா ஆனந்த், லிவிங்ஸ்டன் உள்பட பல நடித்துள்ளார்கள். அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் பாடல்களும் எழுதி இருக்கிறார் வடிவுடையான். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மேலும் கடைசியாக 2015ல் ஜீவன் நடிப்பில் அதிபர் என்ற படம் வெளியான நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாம்பாட்டம் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!