ஜெயம் ரவிக்கு கொரோனா
அக் 22, 2022
Advertisement
நடிகர் ஜெயம் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனான பொன்னியின் செல்வனாக அருள்மொழி வர்மன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்த பட வெளியீட்டிற்கு முன்பு பல ஊர்களுக்கு சுற்றி புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொட்டியது.
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை தனிமைப்படுத்தி அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் தங்களை பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!