
ஆயிரம்நாள் வாக்குறுதியில் 500வது நாளை தொடப்போகும் சமந்தா
அதாவது, சமந்தாவைப் பொறுத்தவரை தனக்குத்தானே செய்து கொண்ட ஆயிரம் நாட்கள் வாக்குறுதியில் சமீபத்தில் 484-வது நாளை கடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், "எதிர்காலத்தில் நாம் வாழ விரும்பும் வாழ்க்கையை எழுத்துப்பூர்வமாக எழுதி வைப்பதில் ஒரு பெரிய சக்தி இருக்கிறது. மேலும், ஆரம்பத்தில் நான் டைரியில் எழுதிய சில விஷயங்கள் நம்ப முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தது; அவற்றை எழுதுவதற்கு எனக்குச் சற்று தயக்கமாக இருந்தது. ஆனால், விடாமுயற்சியுடன் உழைத்ததன் மூலம் அந்த கனவுகள் பல நனவாக மாறி உள்ளன. வெறும் கனவுகளை எழுதி வைப்பது மட்டுமே போதாது, கடின உழைப்பைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்" என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!