
இனி அப்படி கூப்பிடாதீங்க : ஜனனி வேண்டுகோள்
ஜூன் 22, 2022
Advertisement
தெகிடி, அவன் இவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். தற்போது வேழம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் இந்தவாரம் ஜூன் 24ல் வெளியாகிறது. ஜனனி தனக்கு பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை முன்பே நீக்கிவிட்டு ஜனனி என்று மட்டும் வைத்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து பலரும் அவரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வேழம் பட பிரஸ்மீட்டில் பேசிய ஜனனி, ‛‛தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்"" என்றார். ஜனனியின் இந்த பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!