
ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது
ஜூன் 04, 2026
Advertisement
விஜய் நடிப்பில் கடைசியாக உருவான படம் ஜனநாயகன். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பொங்கலுக்கு திரைக்கு வர வேண்டிய இந்த படம் சென்சார் பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்றாலும் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட தற்போது திட்டமிட்டு வருகிறார்கள். இணையத்தில் கசிய விட்டது சம்பந்தமாக எடிட்டிங் குழுவைச் சார்ந்த 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்நிலையில் தற்போது ஜனநாயகன் படம் சம்பந்தமாக மேலும் ஒருவரை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்திருக்கிறது. 10வதாக கைது செய்யப்பட்ட இந்த நபரிடத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!