
ஜனநாயகன் : தியேட்டர்களுக்குப் பறந்த அதிரடி உத்தரவு
பெங்களூருவில் நேற்றைய காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு ஆரம்பமாகியது. அதிகபட்சமாக 1800 ரூபாய் வரை ஆன்லைன் தளங்களிலேயே டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விஜய் படம் வந்தாலே தமிழகத்திலும் டிக்கெட் கட்டணங்களை அதிகமாக உயர்த்திவிடுவார்கள். இதெல்லாம் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பாக நடந்தவை. டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் அதிக அளவில் விற்பது முறைகேடு, ஊழல் கணக்கில்தான் வரும்.
ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கு எதிராக தனது ஆட்சி கடும் நடவடிக்கையை எடுக்கும் என விஜய் சொல்லி வருகிறார். அதனால், அவர் படம் வெளியாக உள்ள தியேட்டர்களுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளதாம்.
எக்காரணத்தைக் கொண்டும் டிக்கெட் கட்டணத்தை அதிகமாக்கி விற்கக் கூடாது. மேலும் "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் படத்தை 18 வயதுக்குக் கீழுள்ள சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என யாரும பார்க்க முடியாது.
எதிர்க்கட்சிகள் அனைவரும் "ஜனநாயகன்" படத்தின் திரையிடலில் ஏதாவது முறைகேடு நடந்தால் அவற்றை வீடியோ எடுத்து வெளியிடத் தயாராக உள்ளார்களாம். அதனால், தங்களது ஆட்சிக்கும் எந்தவிதமான கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என தயாரிப்பாளர் மூலம் வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.



















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்ஏன், இதற்கு முன்னர் இவரது படங்களை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்த்ததே இல்லையா? அப்போது இவருக்கு தெரியலையா? தேர்தலின்போது இவரது கட்சியும், ஏன் இவரே அந்த நடிகர் பிம்பத்தை வச்சுத்தான் வோட்டு கிடைக்கும்னு 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள், சிறுவர்-சிறுமிகள் எல்லோரையும் தூண்டிவிட்டு நான் சொல்லல, ஊரே சொல்லுது அவுங்கவுங்க வீட்டிலே அழுது புலம்பி சொல்லி அவுங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டின்னு எத்தனையோ ஓட்டுக்கள் போட்டிருப்பாங்க. அப்படி பார்ப்பாங்க என்று குத்தாட்ட பாட்டுக்கள், ரத்தம் பீறிடும் அடிதடி காட்சிகள் வேண்டாம் என்று தடுக்கவேண்டியதுதானே. என் வீட்டிலே என் மகன் சொல்லி இப்படித்தான் 5 வோட்டு டி.வி.கே கட்சிக்கு போட்டோம். சினிமாவில் வர்ற மாதிரி ரெண்டு கைகளையும் விரிச்சுக்கிட்டு மேடையில் மக்கள் முன் நிக்கிறது, சினிமா டைலாக் பேசுறது எல்லாமே போலி, சினிமாத்தனம். நான்லாம் அவ்வளோ நல்லவன்னு இப்போ மக்களுக்கு பிலிம் காட்டணும்.