
சிறப்புக் காட்சிகள் இல்லாமல் தனியாக வரும் ஜெயிலர்
தமிழ் சினிமாவில் இப்படியான அதிகாலை காட்சிகளை பரபரப்பாக்கியவர்களில் ரஜினிகாந்த் முதன்மையானவர். அவருடைய படங்களை முதல் காட்சியில் பார்ப்பதற்கு பலரும் விரும்புவார்கள். இந்நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்படாத காரணத்தால் ஆகஸ்ட் 10 வெளியாகும் "ஜெயிலர்" படத்திற்கான காட்சிகள் காலை 9 மணிக்குதான் ஆரம்பமாகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை. அதே சமயம் பெங்களூருவில் காலை 6 மணிக்கும், ஐதராபாத்தில் காலை 8 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இது கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10ம் தேதி தமிழில் வேறு எந்தப் படங்களும் வரவில்லை. "ஜெயிலர்" படத்தில் ரஜினிகாந்த் தவிர மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், என மற்ற மொழி நடிகர்களும் உள்ளதால் தென்னிந்திய அளவில் நல்ல முன்பதிவு இருந்து வருகிறது. முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது முந்தைய படங்களின் ஓபனிங் வசூலை இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!