
தமிழில் அண்ணாத்தயைக் காப்பாற்றாத தங்கை கீர்த்தி சுரேஷ் : தெலுங்கு ஷங்கர் ஐ காப்பாற்றுவாரா ?
ஆனால், ரஜினிகாந்த் நடித்தும் காப்பாற்ற முடியாத அண்ணன், தங்கை சென்டிமென்ட் படமாக 2021 தீபாவளிக்கு வெளிவந்த "அண்ணாத்த" படம் இருந்தது. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திரக் கூட்டம் இருந்ததால் எப்படியும் படம் ஓடிவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அஜித், லட்சுமி மேனன் அண்ணன், தங்கையாக நடித்து 2015ல் தமிழில் வெளிவந்த "வேதாளம்" படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் நடிக்க "போலா ஷங்கர்" என்ற பெயரில் ரீமேக் செய்து ஆகஸ்ட் 11ல் வெளியிடுகிறார்கள். தமிழில் அஜித், லட்சுமி மேனன் இருவருக்குமே "வேதாளம்" படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படமாக அமைந்தது. அது போல தெலுங்கில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்குப் பெற்றுத் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் "தங்கை"யாக நடித்து தோல்வியுற்றவர், அந்த ராசியை தெலுங்கில் மாற்றுவாரா என தெலுங்கு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!