ஜகமே தந்திரம் - தியேட்டர் வெளியீடு முயற்சிகள் தோல்வி?
ஏப் 28, 2021
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் "ஜகமே தந்திரம்". இப்படம் ஓடிடி தளத்தில் ஜுன் 18ம் தேதி அன்று வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியீடு செய்ய சிலர் முயற்சித்ததாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
தனுஷ் நடித்த "அசுரன், கர்ணன்" இரண்டு படங்களுமே முழுமையான கமர்ஷியல் படங்கள் அல்ல. அப்படியிருந்தும் அப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அப்படியிருக்க, முழு கமர்ஷியல் படமான "ஜகமே தந்திரம்" படத்தைத் தியேட்டர்களில் வெளியிட்டால் பெரிய வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என தயாரிப்பாளரிடம் பேசினார்களாம்.
ஆனால், ஓடிடி நிறுவனத்துடன் ஏற்கென பெரிய தொகைக்கு படத்தை ஒப்பந்தம் செய்துவிட்டதால் அதை மீறி படத்தைத் தியேட்டர்களில் வெளியிட முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
ஓடிடி வெளியீடு என அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தியேட்டர்களும் மூடப்பட்டு இருப்பதால் இன்னும் தாமதிக்க வேண்டாம் என நேற்று அறிவிப்பை வெளியிட்டார்களாம். "அசுரன், கர்ணன்" போல வசூலைப் பெறலாம் என முயற்சித்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!