கனவாக தொடங்கியது : ஆதி
ஜூலை 28, 2026
Advertisement
இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017ம் ஆண்டு இயக்கி நடித்த படம், "மீசைய முறுக்கு". இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு ஆதி நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தன் நடிப்பில் வெற்றி பெற்ற மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ளனர். செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகிறது
படம் குறித்து ஆதி வெளியிட்டுள்ள பதிவில் “ஒரு கனவாகத் தொடங்கியது, இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது. அந்த மாயா ஜாலத்தை மீண்டும் ஒரு முறை "மீசைய முறுக்கு 2" மூலம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!