ஐஸ்வர்யா மேனனின் உடற்பயிற்சி வீடியோ
டிச 06, 2021
Advertisement
தமிழில் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதையடுத்து சிவாவுக்கு ஜோடியாக "தமிழ்படம் 2" படத்தில் நடித்த இவர், கடந்தாண்டு வெளியான "நான் சிரித்தால்" படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தற்போது தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.
உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட அவர், தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், தற்போது தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!