
பாடகி தீயுடன் வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் மதுமிதா
கடந்த மாதம் எவிக்ஷனில் மக்களால் வெளியேற்றப்பட்ட மதுமிதா இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது தோழியான தீயுடன் வடிவேலுவை சந்தித்துள்ளார் பிக்பாஸ் மதுமிதா. வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார். தனது தந்தையின் உதவியுடன் வடிவேலுவை சந்திக்க மதுமிதாவை, தீ அழைத்து சென்றிருக்கலாம். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!