சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில்
பிப் 28, 2026
Advertisement
தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வருகிறார் சமுத்திரக்கனி. தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் தடயம் என்கிற வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சிலம்பரசனை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் படத்தில் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் வட சென்னை படத்தில் ஏற்று நடித்திருந்த அதே குணா கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடிக்கிறார்.
இந்த படம் பற்றி சில தகவல்களை சமுத்திரக்கனி கூறும்போது, “வட சென்னை படத்தின் கதை நிகழ்ந்த அதே காலகட்டத்தில் தான் வேறொரு இடத்தில் இந்த கதையும் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. என்னுடைய கதாபாத்திரம் இந்த கதைக்கு ரொம்பவே முக்கியமானது என வெற்றிமாறன் கூறியுள்ளார். மற்றபடி இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா, அவருக்கும் சிம்புவுக்குமான மோதல் படத்தில் இடம் பெறுகிறதா என்பது பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒருவேளை தனுஷும் இந்த படத்தில் நடிக்கிறாரோ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!