தலைநகரம் 2 உருவாக இருட்டு தான் காரணம்: சுந்தர்.சி
ஜூன் 13, 2023
Advertisement
இயக்குனர் சுந்தர்.சி நடிகராக அறிமுகமான படம் "தலைநகரம்" 2006ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை அவரது உதவியாளர் சுராஜ் இயக்கி இருந்தார். சுந்தர்.சி ஜோடியாக ஜோதிர்மயி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் "நாய்சேகர்" காமெடியும் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கி உள்ளார். எஸ்.எம்.பிரபாகரன் ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். பாலக் லால்வாணி ஹீரோயினாக நடித்துள்ளார். கிச்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் சுந்தர்.சி பேசியதாவது: ஆஸ்கர் ரவிச்சந்திரனுககு நன்றி சொல்ல வேண்டும், தலைநகரம் டைட்டில் அவரிடம் தான் இருந்தது, அவர் பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2ம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் துரை கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் "இருட்டு" படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது.
இன்னும் நான் படமே பார்க்கவில்லை, அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர். அவருக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் துரை செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன். என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!