கதைநாயகனாகவும் நடிக்கிறேன், காமெடியனாகவும் வருகிறேன் : அப்புக்குட்டி
மே 07, 2026
Advertisement
நடிகர் அப்புகுட்டிக்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛நண்பர்களால் தான் இந்த நிலையில் நான் இருக்கிறேன். சினிமா நண்பர்கள், மற்ற நண்பர்களுக்கு நன்றி. இந்த நேரத்தில் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். தங்கர்பச்சன், ஜீவா போன்றவர்கள் ஆரம்பகாலத்தில் எனக்கு சின்ன, சின்ன சீன் கொடுத்தார்கள்.
சுசீந்திரனால் வெண்ணிலாகபடி குழு கிடைத்தது. அதுபெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரே அழகர்சாமியின் குதிரையில் கதை நாயகனாக ஆக்கினார். அது, எனக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. அது நம்பிக்கையை கொடுத்த படம். வாழ்க விவசாயி படத்திலும் கதையின் நாயகனாக நடித்தேன். அதுவும் தமிழக அரசு விருது வாங்கிக் கொடுத்தது. அதேபோல் பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற படத்திலும் நடித்தேன். அதுவும் கதையின் நாயகன். கோவா திரைப்பட விழாவில் அந்த படம் திரையிடப்பட்டது. இந்த மாதிரி படங்களால் நம்பிக்கை, மகிழ்ச்சி கிடைக்கிறது. இப்ப காமெடியனாக, கதைநாயகனாக நடித்து வருகிறேன். இரண்டிலும் நடிப்பேன். இந்த நேரத்தில் நண்பர்கள் நற்பணி மன்றத்தை நான் தொடங்கியுள்ளேன்" என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!